கிரிக்கெட் (Cricket)
இந்தியா அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டி: அயர்லாந்து பந்து வீச்சு தேர்வு
- அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 2-வது டி20 போட்டியில் அயர்லாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் டப்ளினில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளினில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.