முழுவதும் விளையாடனும், இல்லையெனில் வரக்கூடாது: இங்கிலாந்து வீரர்கள் மீது இர்பான் பதான் ஆதங்கம்
- இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
- அவர்கள் வெளியேறியது ராஜஸ்தான், ஆர்சிபி, பஞ்சாப் அணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 2024 சீசனின் லீக் சுற்று ஆட்டங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து அணி வீரர்கள் பலர் இடம் பிடித்திருந்தனர்.
ஜூன் 1-ந்தேதி டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குகிறது. அதற்கு முன் பாகிஸ்தான் அணியுடன் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்காக இங்கிலாந்து அணி வீரர்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திரும்ப அழைத்துள்ளது.
இதனால் பிளேஆஃப் சுற்றுகளில் இங்கிலாந்து வீரர்கள் யாரும் இடம் பெறமாட்டார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பட்லர் சிறப்பாக விளையாடி வந்தார். இரண்டு சதங்கள் விளாசியுள்ளார். ஆர்சிபி அணியில் வில் ஜேக்ஸ் விளையாடி வந்தார். பஞ்சாப் அணியில் சாம் கர்ரன் இடம் பிடித்திருந்தார்.
தற்போது முக்கியமான கட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் வெளியேறுவதால் அணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய கிரிக்கெட் விமர்சகருமான இர்பான் பதான் "விளையாட முடிவு செய்துவிட்டால் தொடர் முழுவதும் விளையாட வேண்டும். இல்லையெனில் ஐபிஎல் போட்டியில் விளையாட வரக்கூடாது" இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.