கிரிக்கெட் (Cricket)

வெங்கடேஷ்- ஷ்ரேயாஸ் அதிரடி அரை சதம்: ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கொல்கத்தா

Published On 2024-05-21 17:27 GMT   |   Update On 2024-05-21 17:27 GMT
  • கொல்கத்தா தரப்பில் ஷ்ரேயாஸ் மற்றும் வெங்கடேஷ் அரை சதம் அடித்து அசத்தினர்.
  • ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ் நடராஜன் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் குவாலிபையர்-1ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 19.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக ராகுல் திரிபாதி 55 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டும் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக குர்பாஸ்- நரைன் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 44 ரன்கள் எடுத்தது. 23 ரன்னிலும் நரைன் 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து வெங்கடேஷ் மற்றும் ஷ்ரேயாஸ் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். மேலும் அணியையும் வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

இதனால் கொல்கத்தா அணி 13.4 ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் கொல்கத்தா அணி இறுதிபோட்டிக்கு முன்னேறியது. ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ் நடராஜன் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

Tags:    

Similar News