கிரிக்கெட் (Cricket)

டி.என்.பி.எல்: கோவை வெற்றிபெற 125 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திருச்சி

Published On 2024-07-16 15:26 GMT   |   Update On 2024-07-16 15:26 GMT
  • முதலில் ஆடிய திருச்சி கிராண்ட் சோழாஸ் 124 ரன்கள் எடுத்தது.
  • கோவை அணி கேப்டன் ஷாருக் கான் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட் வீழ்த்தினார்.

கோவை:

கோவையில் நடைபெற்று வரும் டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கோவை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி, முதலில் இறங்கிய திருச்சி அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோவை அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் 35 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து திருச்சி அணி தத்தளித்தது.

சஞ்சய் யாதவ், ஜாபர் ஜமால் ஜோடி நிதானமாக ஆடியது. 7வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த நிலையில் சஞ்சய் யாதவ் 34 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை எடுத்தது. ஜாபர் ஜமால் அதிரடியாக ஆடி 41 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

கோவை அணி சார்பில் கேப்டன் ஷாருக் கான் மற்றும் முகமது ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 125 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்குகிறது.

Tags:    

Similar News