இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: 2 மாற்றங்களுடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து
- இரு அணிகளுக்கும் இடையேயான 4-டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை தொடங்குகிறது.
- 3 டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
ராஞ்சி:
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் கொண்ட தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது. இதற்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 106 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. ராஜ்கோட்டில் நடந்த 3-வது போட்டியிலும் 434 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான 4-டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை தொடங்குகிறது. இதற்கான 11 பேர் கொண்ட ஆடும் லெவன் அணியை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது.
இங்கிலாந்து அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் ரேகன் அகமதுக்கு பதில் பஷிர் இடம் பெற்றுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்கு பதிலாக ராபின்சன் அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின் ஆடும் லெவன்:-
பென் டக்கெட், சாக் கிராலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், பென் ஃபோக்ஸ், ஒல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஷோயப் பஷீர், டாம் ஹார்ட்லி