உலகக் கோப்பை அணியில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ஆதிக்கம்
- சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை சேர்ந்த ஒருவரும் இடம் பெறவில்லை.
- குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி ஆகிய 3 வீரர்கள் தேர்வாகி உள்ளனர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஐ.பி.எல். அணியான மும்பை இந்தியன்ஸ் வீரர்களின் ஆதிக்கம் உள்ளது.
கேப்டன் ரோகித்சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான்கிஷன், ஜஸ்பிரீத் பும்ரா ஆகிய 4 மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் உலகக் கோப்பை அணியில் உள்ளனர்.
குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி ஆகிய 3 வீரர்கள் தேர்வாகி உள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 2 பேரும் (ஸ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாக்கூர்), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் 2 வீரர்களும் (விராட் கோலி, முகமது சிராஜ்), டெல்லி கேப்பிடல்சில் 2 பேரும் (அக்ஷர் படேல், குல்தீப் யாதவ்), லக்னோ (கே.எல்.ராகுல்), சென்னை சூப்பர் கிங்ஸ் (ஜடேஜா) அணிகளில் தலா ஒருவரும் உலகக் கோப்பைக்கு தேர்வாகி உள்ளனர்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை சேர்ந்த ஒருவரும் இடம் பெறவில்லை.