ரச்சின், வில்லியம்சன் அபார சதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நியூசிலாந்து நிதான ஆட்டம்
- முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது.
- வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
மவுண்ட் மாங்கனு:
தென் ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கனுவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, நியூசிலாந்து முதலில் களமிறங்கியது. டேவன் கான்வெ ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். டாம் லாதம் 20 ரன்னில் வெளியேறினார். 39 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்தது.
அடுத்து இறங்கிய கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் சதமடித்து அசத்தினர். இந்த ஜோடியை தென் ஆப்பிரிக்கா வீரர்களால் பிரிக்க முடியவில்லை
இறுதியில், முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது. வில்லியம்சன் 112 ரன்னும், ரவீந்திரா 118 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 219 ரன்கள் சேர்த்துள்ளது.