முதல் டெஸ்ட்: நியூசிலாந்துக்கு எதிராக 162 ரன்னில் சுருண்டது தென்ஆப்பிரிக்கா
- கீகன் பீட்டர்சன் 45 ரன்களும், டேவிட் பெடிங்காம் 32 ரன்களும் சேர்த்தனர்.
- ஹென்ரி, மிட்செல் சான்ட்னெர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மவுங்கானுய்யில் நடைபெற்று வருகிறது. தென்ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
ரச்சின் ரவீந்திரா (240), கேன் வில்லியம்சன் (118) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 511 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணியின் நீல் பிராண்ட் 6 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 80 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 162 ரன்னில் சுருண்டது.
கீகன் பீட்டர்சன் 45 ரன்களும், டேவிட் பெடிங்காம் 32 ரன்களும் சேர்த்தனர். நியூசிலாந்து அணி சார்பில் மேட் ஹென்ரி, மிட்செல் சான்ட்னெர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். கைல் ஜாமிசன், ரச்சின் ரவீந்திரா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
ஹென்ரி
349 ரன்கள் முன்னிலை பெற்றும் நியூசிலாந்து பாலோ-ஆன் கொடுக்காமல் 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.