இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் - நியூசிலாந்து கேப்டனாக டாம் லாதம் நியமனம்
- இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கேன் வில்லியம்சன் பெயர் இடம் பெறவில்லை.
- இந்த தொடர் ஜனவரி 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.
வெலிங்டன்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர் ஜனவரி 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்க்கொள்வதற்கு முன்னர் நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
சமீபத்தில் நியூசிலாந்தின் டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய கேன் வில்லியம்சன் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் மட்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுளார்.
இந்நிலையில், இந்திய தொடருக்கு எதிரான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு எதிரான தொடரில் நியூசிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பை டாம் லதாம் ஏற்கிறார். இந்திய அணிக்கு எதிரான தொடரில் கேன் வில்லியம்சன் பெயர் இடம் பெறவில்லை.
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி விவரம் வருமாறு:
டாம் லாதம் (கேப்டன்), மார்க் சாம்ப்மென், லாக்கி பெர்குசன், டேரில் மிட்செல், மிட்செல் சாண்ட்னெர், பின் ஆலென், டேவன் கான்வே, மேட் ஹென்றி, ஹென்றி நிக்கோல்ஸ், ஹென்றி சிப்லே, மைக்கெல் பிரேஸ்வெல், ஜேக்கப் டப்பி, ஆடம் மில்னே, க்ளென் பிலிப்ஸ், இஷ் சோதி.