2வது டி20 போட்டியில் ரிஸ்வான் அதிரடி: அயர்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்
- பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.
- முதல் டி 20 போட்டியில் அயர்லாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தியிருந்தது.
டப்ளின்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் லார்கான் டக்கர் அரை சதமடித்து 51 ரன்களில் அவுட்டானார்.
பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி 3 விக்கெட்டும், அப்பாஸ் அப்ரிடி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 194 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் 16.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் அதிரடியாக ஆடி 75 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.