கிரிக்கெட் (Cricket)

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: 21 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்

Published On 2022-10-07 05:55 GMT   |   Update On 2022-10-07 05:55 GMT
  • முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது.
  • விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 78 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.

நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இன்று நியூசிலாந்தில் தொடங்கியது. இன்று காலை நடந்த முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான்-வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் ஜெயித்து வங்காளதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது. விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 78 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். ஷா மசூத் 31 ரன்னும், பாபர் ஆசாம் 22 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்காளதேசம் விளையாடியது. 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக யாசிர் ஷா 42 ரன்கள் எடுத்தார். அவர் கடைசி ஓவரில் 20 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் தரப்பில் முகமது வாசிம் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பாகிஸ்தான் அணி நாளை நியூசிலாந்துடன் இதே மைதானத்தில் மோதுகிறது. 

Tags:    

Similar News