ராசி இல்லா ராஜா.. இந்தியா- ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவராகும் ரிச்சர்ட் கெட்டில்பரோ
- 2014-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்த போது இவர் தான் நடுவராக இருந்தார்.
- இவர் நடுவராக செயல்பட்ட 2016 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்தது.
டி20 உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சூப்பர் 8 சுற்று வெஸ்ட் இண்டீசில் இன்று தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - அமெரிக்கா அணிகள் மோத உள்ளன.
இந்நிலையில் இதற்கான நடுவர்களை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி இந்திய அணிக்கு எமனாக கருதபடும் ரிச்சர்ட் கெட்டில்பரோ இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இடம் பிடித்தது மட்டுமல்லாமல் இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் போட்டிக்கு இவர் நடுவராக செயல்பட உள்ளார். இது இந்திய ரசிகர்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
ஏனென்றால் ஐசிசி தொடர்களில் இந்திய அணி தோல்வியடைந்த அத்தனை போட்டிகளிலும் ரிச்சர்ட் கெட்டில்பரோ தான் நடுவராக செயல்பட்டுள்ளார். இவர் நடுவராக இருந்த 2014-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டியில் இலங்கை அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது. அதேபோல் 2015 உலக்கோப்பை அரையிறுதியில் இந்தியா அடைந்த தோல்வி, 2016 டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்தது.
அதேபோல் 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது. அப்போது ரிச்சர்ட் கெட்டில்பரோ தான் நடுவராக பணியாற்றியுள்ளார். அதேபோல் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணியின் டோனி ரன் அவுட்டான போது, நடுவராக இருந்து கெட்டிபரோ கொடுத்த ரியாக்ஷன் இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாகும். அதேபோல் 2023-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சுப்மன் கில்லுக்கு அவுட் கொடுத்து சர்ச்சையில் சிக்கினார் கெட்டில்பரோ.
இதை தவிர ஒருநாள் உலகக் கோப்பை இறுதி போட்டியிலும் இவர் தான் நடுவராக செயல்பட்டார். இதிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனால் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியில் என்ன நடக்கும் என ரசிகர்கள் பீதியுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
சூப்பர் 8 சுற்றுக்கான நடுவர்கள் விவரங்களையும் எந்தெந்த போட்டிக்கு யார் நடுவர் என்பதையும் ஐ.சி.சி அறிவித்துள்ளது. சூப்பர் 8 சுற்றில் மொத்தம் 12 ஆட்டங்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் 8 சுற்றுக்கான நடுவர்கள் விவரம்:-
1.) அமெரிக்கா - தென் ஆப்பிரிக்கா (ஆண்டிகுவா)
நடுவர்: ரஞ்சன் மதுகல்லே
கள நடுவர்கள்: கிறிஸ் கேப்னி மற்றும் ரிச்சர்ட் கெட்டில்பரோ
டிவி நடுவர்: ஜோயல் வில்சன்
நான்காவது நடுவர்: லாங்டன் ருசரே
2.) இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் (செயிண்ட் லூசியா)
நடுவர்: ஜெப் குரோவ்
கள நடுவர்கள்: நிதின் மேனன் மற்றும் அஹ்சன் ராசா
டிவி நடுவர்: ஷர்புத்தூலா இப்னே ஷாஹித்
நான்காவது நடுவர்: கிறிஸ் பிரவுன்
3.) ஆப்கானிஸ்தான் - இந்தியா (பார்படாஸ்)
நடுவர்: டேவிட் பூன்
கள நடுவர்கள்: ரோட்னி டக்கர் மற்றும் பால் ரீபெல்
டிவி நடுவர்: அல்லாஹுதீன் பலேக்கர்
நான்காவது நடுவர்: அலெக்ஸ் வார்ப்
4.) ஆஸ்திரேலியா - வங்காளதேசம் (ஆண்டிகுவா)
நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன்
கள நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் மைக்கேல் கோப்
டிவி நடுவர்: குமார் தர்மசேன
நான்காவது நடுவர்: அட்ரியன் ஹோல்ஸ்டாக்
5.) இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா (செயிண்ட் லூசியா)
நடுவர்: ஜெப் குரோவ்
கள நடுவர்கள்: ஷர்புத்தூலா இப்னே ஷாஹித் மற்றும் கிறிஸ் பிரவுன்
டிவி நடுவர்: ஜோயல் வில்சன்
நான்காவது நடுவர்: கிறிஸ் கேப்னி
6.) அமெரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் (பார்படாஸ்)
நடுவர்: டேவிட் பூன்
கள நடுவர்கள்: பால் ரீபெல் மற்றும் அல்லாஹுதீன் பலேக்கர்
டிவி நடுவர்: ரோட்னி டக்கர்
நான்காவது நடுவர்: அலெக்ஸ் வார்ப்
7.) இந்தியா - வங்காளதேசம் (ஆண்டிகுவா)
நடுவர்: ரஞ்சன் மதுகல்லே
கள நடுவர்கள்: மைக்கேல் கோப் மற்றும் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக்
டிவி நடுவர்: லாங்டன் ருசரே
நான்காவது நடுவர்: ரிச்சர்ட் கெட்டில்பரோ
8.) ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா (செயிண்ட் வின்செண்ட்)
நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன்
கள நடுவர்கள்: குமார் தர்மசேனா மற்றும் அஹ்சன் ராசா
டிவி நடுவர்: ரிச்சர்ட் இல்லிங்வொர்த்
நான்காவது நடுவர்: நிதின் மேனன்
9.) அமெரிக்கா - இங்கிலாந்து (பார்படாஸ்)
நடுவர்: டேவிட் பூன்
கள நடுவர்கள்: கிறிஸ் கேப்னி மற்றும் ஜோயல் வில்சன்
டிவி நடுவர்: பால் ரீபெல்
நான்காவது நடுவர்: அல்லாஹுதீன் பலேக்கர்
10.) வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா (ஆண்டிகுவா)
நடுவர்: ரஞ்சன் மதுகல்லே
கள நடுவர்கள்: ரோட்னி டக்கர் மற்றும் அலெக்ஸ் வார்ப்
டிவி நடுவர்: கிறிஸ் பிரவுன்
நான்காவது நடுவர்: ஷர்புத்தூலா இப்னே ஷாஹித்
11.) இந்தியா - ஆஸ்திரேலியா (செயிண்ட் லூசியா)
நடுவர்: ஜெப் குரோவ்
கள நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்பரோ மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வொர்த்
டிவி நடுவர்: மைக்கேல் கோப்
நான்காவது நடுவர்: குமார் தர்மசேனா
12.) ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் (செயிண்ட் வின்செண்ட்)
நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன்
கள நடுவர்கள்: லாங்டன் ருசேரே மற்றும் நிதின் மேனன்
டிவி நடுவர்: அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக்
நான்காவது நடுவர்: அஹ்சன் ராசா.