கிரிக்கெட் (Cricket)

ஐ.பி.எல்.லில் 5 சிக்சர்கள் அடித்தது எனது வாழ்க்கையை மாற்றியது- ரிங்குசிங்

Published On 2023-08-23 08:35 GMT   |   Update On 2023-08-23 08:35 GMT
  • அயர்லாந்துக்கு எதிரான தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம். தொடரை வென்று விட்டோம்.
  • 2-வது போட்டியில் எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டேன்.

டூப்ளின்:

இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது.

ஜஸ்பிரீத் பும்ரா தலைமையிலான இந்திய அணி முதல் 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது. முதல் போட்டியில் 2 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 33 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

இன்றைய ஆட்டத்திலும் அயர்லாந்தை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றியுடன் தொடரை முழுமையாக வெல்லும் ஆர்வத்தில் இந்திய அணி இருக்கிறது.

இந்த ஆட்டம் குறித்து இந்திய வீரர் ரிங்குசிங் கூறியதாவது:-

அயர்லாந்துக்கு எதிரான தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம். தொடரை வென்று விட்டோம். 3-வது போட்டியிலும் வென்று உயர்நிலையை அடைவதை இலக்காக கொண்டுள்ளோம்.

முதல் ஆட்டத்தில் விளையாடுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தேன். ஆனால் மழையால் என்னால் பேட்டிங் செய்ய முடியாமல் போனது. 2-வது போட்டியில் எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டேன்.

ஐ.பி.எல். போட்டியில் 5 சிக்சர்கள் அடித்தது எனது வாழ்க்கையை மாற்றியது. அந்த தருணத்தை ரசிகர்கள் இன்னும் நினைவில் வைத்து உள்ளார்கள். ரசிகர்கள் என் மீது அன்பை பொழிவதால் நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

25 வயதான ரிங்குசிங் ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் கடைசி ஓவரில் 5 சிக்சர்களை தொடர்ச்சியாக அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

இதனால் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு தேர்வானார். 2-வது 20 ஓவர் ஆட்டத்தில் ரிங்குசிங் 21 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 38 ரன் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News