கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மெதுவான அரைசதம் - ரிஸ்வான் மோசமான சாதனை

Published On 2024-06-12 10:14 GMT   |   Update On 2024-06-12 10:14 GMT
  • முதலில் பேட் செய்த கனடா 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது.
  • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 107 ரன் எடுத்து வென்றது.

நியூயார்க்:

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், கனடா அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த கனடா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆரோன் ஜான்சன் 52 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தான் சார்பில் முகமது அமீர், ஹரிஸ் ராப் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 107 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முகமது ரிஸ்வான் 53 ரன்கள் எடுத்தார். பாபர் அசாம் 33 ரன் எடுத்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அரைசதம் அடிக்க 52 பந்துகளை எடுத்துக்கொண்டார். இதன்மூலம் அவர் மோசமான சாதனையை படைத்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மெதுவான அரைசதம் (பந்துகள் அடிப்படையில்) அடித்த வீரர் என்ற மோசமான சாதனையை ரிஸ்வான் (52 பந்துகள்) படைத்தார். இதற்கு முன் இந்தப் பட்டியலில் டேவிட் மில்லர் (50 பந்துகள் - நெதர்லாந்துக்கு எதிராக, 2024) முதல் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News