கிரிக்கெட் (Cricket)
null

ஆஸி..பந்து வீச்சாளர்களை பறக்க விட்ட ரோகித்- ஒரே போட்டியில் 3 சாதனைகள் படைத்து அசத்தல்

Published On 2024-06-24 15:36 GMT   |   Update On 2024-06-24 15:45 GMT
  • விராட் கோலி 5 பந்தில் 0 ரன்னில் ஆட்டமிழந்தார்.
  • இந்திய அணியின் ஸ்கோர் 52- ஆக இருக்கும் போது ரோகித் சர்மாவின் ரன் 50-ஆக இருந்தது

டி20 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் - கோலி களமிறங்கினர்.

கோலி டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனை தொடர்ந்து ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். குறிப்பாக ஸ்டார்க் வீசிய 3-வது ஓவரை சிக்சர் பவுண்டரியுமாக பறக்க விட்டார். அந்த ஓவரில் மட்டும் 4 சிக்சர் 1 பவுண்டரி அடங்கும்.

இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200 சிக்சர் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் படைத்துள்ளார். இதை தவிர நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அதிவேக அரைசதம் விளாசிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். 19 பந்தில் அரை சதம் விளாசி அசத்தி உள்ளார்.

இந்திய அணியின் ஸ்கோர் 52- ஆக இருக்கும் போது ரோகித் சர்மாவின் ரன் 50-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய விராட் கோலி, பாபர் அசாம் ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை ரோகித் சர்மா (4165) பிடித்துள்ளார். அடுத்த இரு இடங்கள் முறையே பாபர் அசாம் 4145 ரன்களும் விராட் கோலி 4103 ரன்களும் எடுத்துள்ளனர். 

Tags:    

Similar News