கிரிக்கெட் (Cricket)

ரோகித் சர்மா

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500 சிக்சர் அடித்த முதல் இந்திய வீரர் - ரோகித் சர்மா சாதனை

Published On 2022-12-08 00:10 GMT   |   Update On 2022-12-08 00:10 GMT
  • இதுவரை நடந்த இரு போட்டிகளிலும் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
  • நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா 28 பந்துகளில் 3 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என 51 ரன்களை விளாசினார்.

மிர்பூர்:

இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த இரு போட்டிகளிலும் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக கடைசி கட்டத்தில் இறங்கி அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 28 பந்துகளில் 5 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் என 51 ரன்களை விளாசினார்.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500-க்கும் மேற்பட்ட சிக்சர்கள் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார்.

ஒருநாள் போட்டிகளில் 256 சிக்சர்களும், டி20 தொடரில் 182 சிக்சர்களும், டெஸ்ட் தொடரில் 64 சிக்சர்களும் ரோகித் சர்மா விளாசியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் (553) அடித்த வீரர்கள் பட்டியலில் மேற்கிந்தியத் தீவின் கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் ரோகித் சர்மா உள்ளார்.

Tags:    

Similar News