160 ரன்கள் போதும் என நினைத்தோம்.. ஆனால் 180 அடித்தால் கூட போதாது.. சிக்கந்தர் ரஸா
- இந்திய அணி 15.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
- யஷஸ்வி ஜெய்ஸ்வால் 93 ரன்னும், சுப்மன் கில் 58 ரன்களை சேர்த்தனர்.
ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 15.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 3-1 என முன்னிலையில் உள்ளது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 93 ரன்னும், ஷுப்மன் கில் 58 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இந்நிலையில் 160 ரன்களைச் சேர்த்தால் வெற்றி பெறலாம் என நினைத்தோம். ஆனால் இந்திய அணி பேட்டிங் செய்த விதத்தில் 180 ரன்கள் எடுத்திருந்தால் கூட போதுமானதாக இருக்காது என ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ரஸா கூறினார்.
இப்போட்டியின் தோல்வி குறித்து அவர் கூறியதாவது:-
இன்றைய போட்டிக்கான விக்கெட் சற்று ஈரமாக இருந்தது என்று நினைக்கிறேன். இதில் நாங்கள் 160 ரன்களைச் சேர்த்தால் வெற்றி பெறலாம் என நினைத்தோம். ஆனால் இந்திய அணி பேட்டிங் செய்த விதத்தில் 180 ரன்கள் எடுத்திருந்தால் கூட போதுமானதாக இருக்காது. ஒவ்வொரு விளையாட்டிலிருந்தும் நாங்கள் வளர்ந்து கொண்டே இருக்கிறோம்.
கடைசி 5 ஓவர்களில் 8-10 ரன்கள் அதிகம் என்று நினைக்கிறேன். இந்த பிட்ச்சில் பந்துவீச்சாளர்கள் கொஞ்சம் பவுன்ஸ் கிடைத்தது. எனவே இன்னிங்ஸின் தொடக்கத்தில் நாங்கள் எங்களை கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. இன்னிங்ஸ் இடைவேளையில் ஹெவி ரோலர் பிட்ச்சின் மீது பயன்படுத்தப்பட்ட காரணத்தால் நிலைமை அவர்களுக்கு சாதகாம செயல்பட்டது. இதன் காரணமாக அவர்கள் பேட்டிங் செய்யும் போது அது எளிதாக அமைந்துவிட்டது.
இவ்வாறு ராஸா கூறினார்.