கிரிக்கெட் (Cricket)

மேத்யூஸ், சண்டிமால் அசத்தல் சதம்: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வலுவான முன்னிலை பெற்ற இலங்கை

Published On 2024-02-04 01:49 GMT   |   Update On 2024-02-04 01:49 GMT
  • இலங்கை, ஆப்கானிஸ்தான் இடையிலான ஒரே டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
  • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 198 ரன்களில் ஆல் அவுட்டானது.

கொழும்பு,

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி கொழும்புவில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 198 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ரஹ்மத் 91 ரன்கள் அடித்தார்.

இலங்கை சார்பில் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து இலங்கை அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முதல் நாளில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் அடித்திருந்தது. நிசன் மதுஷ்கா 36 ரன்களுடனும், திமுத் கருணரத்னே 42 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. திமுத் கருணரத்னே 77 ரன்னும் எடுத்தனர். மேத்யூஸ், சண்டிமால் ஜோடி சிறப்பாக விளையாடி சதமடித்தனர். மேத்யூஸ் 141 ரன்னும், சண்டிமால் 107 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 410 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் இலங்கை 212 ரன்கள் என்ற வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் சார்பில் நவீத் சத்ரன், கைஸ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டு வீழ்த்தினர்.

Tags:    

Similar News