கிரிக்கெட் (Cricket)

ஆசிய விளையாட்டு போட்டி - இலங்கை வெற்றிபெற 117 ரன்களை நிர்ணயித்தது இந்திய பெண்கள் அணி

Published On 2023-09-25 07:42 GMT   |   Update On 2023-09-25 07:42 GMT
  • டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.
  • முதலில் ஆடிய இந்திய அணி 116 ரன்களை எடுத்தது.

ஹாங்சோ:

ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டியின் இறுதியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா 46 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்கவில்லை.

இலங்கை அணி சார்பில் பிரபோதினி, சுகந்திகா குமாரி, ரனவீரா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

Tags:    

Similar News