கிரிக்கெட்

SKY அதிரடி அரை சதம்: இந்தியா 213 ரன்கள் குவிப்பு

Published On 2024-07-27 15:21 GMT   |   Update On 2024-07-27 15:21 GMT
  • டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
  • முதலில் ஆடிய இந்தியா 213 ரன்களை குவித்தது.

பல்லகெலே:

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், சுப்மன் கில் இறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால் பவர்பிளே முடிவில் இந்திய அணி 74 ரன்களை சேர்த்தது.

முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்த நிலையில் சுப்மன் கில் 34 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஜெய்ஸ்வால் 40 ரன்னில் அவுட்டானார்.

தொடர்ந்து இறங்கிய சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் ஜோடி பொறுப்புடன் ஆடியது. அதிரடியாக ஆடிய சூர்யகுமார் 26 பந்தில் அரை சதம் அடித்து 58 ரன்னில் ஆட்டமிழந்தார். பாண்ட்யா 9 ரன்னில் அவுட்டானார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 49 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களைக் குவித்தது.

இலங்கை அணி சார்பில் பதிரனா 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

Tags:    

Similar News