கிரிக்கெட் (Cricket)

கடந்த ஆறு ஆண்டுகளில் தற்போது சிறந்த ஃபார்மில் இருப்பதாக உணர்கிறேன்: ஸ்டீவ் ஸ்மித்

Published On 2022-11-18 08:29 GMT   |   Update On 2022-11-18 08:29 GMT
  • உலகக் கோப்பை அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
  • இங்கிலாந்துக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடினார்.

உலகின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக ஜொலித்து வந்தவர்களில் ஒருவர் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித். மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் அசுர பலத்துடன் திகழ்ந்தார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை பெற்று அணிக்கு திரும்பிய பிறகு, டெஸ்ட் போட்டியில் மட்டும் சிறப்பாக விளையாடினார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிகப்பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை.

குறிப்பாக கடந்த ஒருவருடமாக இவரது ஆட்டம் எடுபடவில்லை. இதனால் சொந்த மண்ணில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பெஞ்ச்-ல் அமர்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் தான் நேற்று இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இந்த போட்டியில் 78 பந்தில் 80 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் ஸ்மித்.

இந்த ஆட்டம் முடிந்த பிறகு பேசுகையில், கடந்த ஆறு ஆண்டுகளில் தற்போது சிறந்த ஃபார்மில் இருப்பதாக உணர்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். இந்த கோடைக்கால கிரிக்கெட் சிறப்பாக விளையாடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

நேற்றைய ஆட்டம் குறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் ''அனேகமாக இந்த வருடங்களில் சிறந்த ஆட்டமாக இது இருந்திருக்கிறது என உணர்கிறேன். உண்மையிலேயே இந்த ஆட்டத்தில் நான் மிகவும் நல்ல நிலையில் இருந்தேன். சிறந்ததாக உணர்கிறேன். கடந்த ஆறு ஆண்டுகளில் நான் இதுபோன்று உணரவில்லை.

நாம் எப்போதும் முழு நிறைவை நோக்கி செல்கிறோம். நான் அதை பெற முதல் ஆட்டத்தில் அடித்த ரன்கள் நெருக்கமாக இருந்தது.'' என்றார்.

உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மட்டும் களம் இறங்கினார். அதில் நான்கு ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார்.

Tags:    

Similar News