டி20 உலகக்கோப்பை- விராட் கோலி சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்
- சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 53 ரன்களை குவித்தார்.
- ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்.
டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி முறையே 8 மற்றும் 24 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 20 ரன்களை அடித்த நிலையில், சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 53 ரன்களை குவித்தார்.
அடுத்து வந்த ஷிவம் துபே 10 ரன்களையும், ஹர்திக் பாண்ட்யா 32 ரன்களை அடித்தனர். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை சேர்த்தது.
182 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 47 ரன்களில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில், 28 பந்துகளில் 53 ரன்களை எடுத்து சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இதன்மூலம், சூர்யகுமார் யாதவ் விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
விராட் கோலி இதுவரை 113 இன்னிங்ஸில் 15 முறை ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார்.
இதனை சமன் செய்யும் வகையில், சூர்யகுமார் யாதவ் 61 இன்னிங்ஸில் 15 முறை ஆட்டநாயகன் விருதை பெற்று சாதனை படைத்துள்ளார்.