கிரிக்கெட் (Cricket)

ஒரே ஓவரில் 5 சிக்சர் விளாசிய வில் ஜேக்ஸ்.. மிஸ் ஆன 6-வது பந்தால் உலக சாதனையும் மிஸ்.. வீடியோ

Published On 2023-06-23 12:13 GMT   |   Update On 2023-06-23 12:13 GMT
  • முதலில் களமிறங்கிய சர்ரே அணி 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 7 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் சேர்த்தது.
  • அதைத்தொடர்ந்து ஆடிய மிடில்சக்ஸ் அணி 19.2 ஓவரிலேயே 254 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 2023 டி20 ப்ளாஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் சர்ரே மற்றும் மிடில்சக்ஸ் அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற மிடில்சக்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய சர்ரே அணி 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 7 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் சேர்த்தது. அதைத்தொடர்ந்து 253 என்ற கடினமான இலக்கை துரத்திய மிடில்சக்ஸ் அணி 19.2 ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த சேசிங்கில் மூலம் ஒட்டுமொத்த உலக டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோரை வெற்றிகரமாக சேசிங் செய்த 2-வது அணி என்ற மாபெரும் சாதனையை மிடில்சக்ஸ் அணி படைத்துள்ளது. மேலும் டி20 ப்ளாஸ்ட் தொடரில் அதிகபட்ச இலக்கை துரத்திய முதல் அணி என்ற வரலாற்றையும் படைத்தது.


இதற்கு முன் கடந்த மார்ச் மாதம் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 259 ரன்களை தென்னாப்பிரிக்கா வெற்றிகரமாக சேசிங் செய்ததே உலக சாதனையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சர்ரே அணியின் பேட்ஸ்மேன் வில் ஜேக்ஸ் 5 பந்திகளில் 5 சிக்சர்களை விளாசி சாதனையை படைத்தார். கடைசி பந்தில் சிக்சர் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஃபுல் டாஸ் பந்தை தவற விட்டு சிங்கிள் மட்டுமே எடுத்தார்.

அதன் காரணமாக முதல் 5 பந்துகளில் 5 முரட்டுத்தனமான சிக்சர்களை அடித்த அவர் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற யுவராஜ் சிங், ஹெர்சல் கிப்ஸ், கைரன் பொல்லார்ட் ஆகியோரின் உலக சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை நூலிழையில் தவற விட்டார்.

5 சிக்சர்கள் பறக்கவிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News