மீண்டும் டக் அவுட்.. நம்ம விராட் கோலிக்கு என்னதான் ஆச்சு.. தொடரும் தடுமாற்றம்
- 6 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 2 போட்டிகளில் மட்டும் 2 இலக்க ரன்களை அடித்துள்ளார்.
- அதிகபட்சமாக ஒரு போட்டியில் 37 மற்றொரு போட்டியில் 24 ரன்கள் எடுத்துள்ளார்.
டி20 தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் - கோலி களமிறங்கினர்.
விராட் கோலி முதல் பந்தில் இருந்தே தடுமாற்றத்துடன் விளையாடினார். 4 பந்துகள் 1 ரன் எடுக்க திணறிய அவர் 5-வது பந்தில் புல் ஷாட்டை அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன்மூலம் இந்த தொடரில் 2-வது முறையாக விராட் கோலி டக் அவுட் ஆகி உள்ளார்.
மேலும் இந்த தொடரில் விராட் கோலியின் தடுமாற்றம் தொடர்கிறது. 6 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 2 போட்டிகளில் மட்டும் 2 இலக்க ரன்களை அடித்துள்ளார். ஒரு போட்டியில் 24 மற்றொரு போட்டியில் 37 ரன்கள் இதை தவிர மற்ற போட்டிகள் முறையே 1,4,0,0 என ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறி இந்திய ரசிகர்களை ஏமாற்றி வருகிறார்.
இவரது ஆட்டம் குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் அவரை 3-வது இடத்தில் களமிறக்க வேண்டும் எனவும் ஒரு சிலர் அவர் பொறுமையாக நின்றால் அதிக ரன்களை விளாசுவார் என்றும் தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் அவருக்கு பதிலாக ஜெய்ஸ்வால் களமிறக்க வேண்டும் எனவும் தெரிவித்து வருகின்றனர்.