கிரிக்கெட் (Cricket)
null

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8: 180 ரன்களை குவித்த வெஸ்ட் இண்டீஸ்

Published On 2024-06-20 02:42 GMT   |   Update On 2024-06-20 04:16 GMT
  • டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
  • அதிரடி வீரர் ரசல் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவில் 8 அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு முன்னேறின. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

அதன்படி, இன்று வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் மோதி வருகிறது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.


இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரண்டன் கிங் 23 ரன்களும், சார்லஸ் 38 ரன்களும் எடுத்து அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். பிரண்டன் கிங் காயம் காரணமாக ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய பூரன், கேப்டன் பவல் ஆகியோர் தலா 36 ரன்கள் எடுத்து தங்களது பங்களிப்பை அளித்தனர். அதிரடி வீரர் ரசல் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இறுதியில் ரூதர்போர்டு சில பவுண்டரிகள் விளாச, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

Tags:    

Similar News