கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பை: நியூயார்க் சென்றடைந்தது இந்திய அணி

Published On 2024-05-27 10:11 GMT   |   Update On 2024-05-27 10:11 GMT
  • இந்தியா முதல் சுற்றில் நான்கு போட்டிகளில் விளையாடுகிறது.
  • மூன்று போட்டிகள் நியூயார்க் நகரில் நடைபெறுகிறது.

20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை அணி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளில் நடத்தப்படுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. இந்தியா வங்காளதேச அணிக்கெதிராக பயற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடக்கிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்ததால் இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் முன்னதாகவே அமெரிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறாத ஐபிஎல் அணிகளில் இடம் பிடித்த வீரர்கள் உள்ளிட்டோர் முதற்கட்டமாக அமெரிக்கா செல்ல பிசிசிஐ ஏற்பாடு செய்தது.

அதன்படி நேற்று முன்தினம் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்டோர் அமெரிக்கா புறப்பட்டனர். இந்த நிலையில் இந்திய நேரப்படி இன்று காலை அமெரிக்காவின் நியூயார்க் நகர் சென்றடைந்தனர். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

பயிற்சியாளர்கள் டிராவிட், விக்ரம் ரதோர், வீரர்கள் அக்சார் பட்டேல், முகமது சிராஜ், ஆர்ஷ்தீப் சிங், ரோகித் சர்மா, பும்ரா, ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் நியூயார்க் சென்றடைந்துள்ளனர்.

இந்திய அணி விளையாடும் முதல் சுற்று போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவில்தான் நடைபெறுகிறது. மூன்று போட்டிகள் நியூயார்க்கிலும், ஒரு போட்டி லாடர்ஹில்லிலும் நடைபெறுகிறது.

Tags:    

Similar News