ரோகித் சர்மாவுக்கு பிரியாவிடை கொடுத்தார்களா மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள்- வீடியோ
- ஹர்திக் பாண்ட்யா தலைமையில் கீழ் ரோகித் சர்மா விளையாட விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
- அடுத்த சீசனில் வெறு அணிக்கு செல்ல வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் ரோகித் சர்மா. மும்பை இந்தியன்ஸ் அணியின் அசைக்க முடியாத வீரராகவும், கேப்டனாகவும் திகழ்ந்தார். இவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இதனால் ரோகித் சர்மா விரும்பும் வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக திகழ்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கேப்டனாக்கியது.
இது ரோகித் சர்மாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் இந்த தொடருக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட மாட்டார் என யூகிக்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்த நிலையில், நேற்று வான்கடே மைதானத்தில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோ அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டது.
முதலில் விளையாடிய லக்னோ 214 ரன்கள் குவித்தது, பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 196 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது.
This could be Rohit Sharma's last walk back in a Mumbai jersey. There are strong indications that he won't play under Hardik Pandya.
This could be Rohit Sharma's last walk back in a Mumbai jersey. There are strong indications that he won't play under Hardik Pandya.#RohitSharma #MIvsLSG pic.twitter.com/L0l3TYQMpM
— Manoj Tiwari (@ManojTiwariIND) May 18, 2024
இந்த போட்டியில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி 38 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 68 ரன்கள் விளாசினார். அவர் ஆட்டமிழந்து ஆடுகளத்தை விட்டு வெளியேறும்போது வான்கடே மைதானத்தில் அமர்ந்து போட்டியை ரசித்து கொண்டிருந்த ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து கைத்தட்டினர்.
இதை பார்க்கும்போது அவருக்கு பிரியாவிடை கொடுப்பதுபோல் இருந்தது. இதனால் நேற்று விளையாடிய போட்டிதான் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மா விளையாடிய கடைசி போட்டி என பார்க்கப்படுகிறது.
நேற்றைய போட்டி முடிவடைந்த பின் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளர் நீடா அம்பானியுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.