கிரிக்கெட்

டிஎன்பிஎல்: 35 ரன்கள் வித்தியாசத்தில் சேலத்தை வீழ்த்தி திருச்சி அபார வெற்றி

Published On 2024-07-14 13:21 GMT   |   Update On 2024-07-14 13:21 GMT
  • இன்று சேலம் ஸ்பார்டன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின.
  • திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது.

8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது.

இங்கு அரங்கேறிய முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11-ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிமைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இன்று சேலம் ஸ்பார்டன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன் படி முதலில் களமிறங்கிய திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய சஞ்சய் யாதவ் 33 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சேலம் அணி தரப்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அடுத்ததாக களமிறங்கிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணி வீரர்கள் திருச்சி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை மட்டுமே சேலம் அணி எடுத்தது.

இதன் மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணி அபார வெற்றி பெற்றது. சேலம் அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது அட்னான் கான் 40 ரன்களும் விவேக் 33 ரன்களும் எடுத்தனர். திருச்சி அணி தரப்பில் சரவண குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Tags:    

Similar News