கிரிக்கெட் (Cricket)

அனிருத்

டிஎன்பிஎல் - திருச்சி அணி வெற்றிபெற 137 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மதுரை

Published On 2022-07-24 11:20 GMT   |   Update On 2022-07-24 11:20 GMT
  • டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
  • முதலில் ஆடிய மதுரை பாந்தர்ஸ் அணி 136 ரன்களை எடுத்தது.

சேலம்:

6-வது டி.என்.பி.எல். டி20 ஓவர் கிரிக்கெட் தொடரின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடக்கிறது.

இன்று நடைபெறும் 27-வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருச்சி அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக அனிருத் 34 ரன்கள் எடுத்தார்.

அனிருத் , ஆதித்யா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர் ஆதித்யா 26 ரன்னில் அவுட்டானார். அருண் கார்த்திக் 5 ரன்னிலும், ரித்திக் ஈஸ்வரன் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் சதுர்வேதி 15 ரன்னிலும், ஜெகதீசன் கவுசிக் 22 ரன்னிலும் வெளியேறினர்.

கடைசி கட்டத்தில் சன்னி சந்து 8 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 24 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

திருச்சி அணி சார்பில் பொய்யாமொழி 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்குகிறது.

Tags:    

Similar News