கிரிக்கெட் (Cricket)

டோனி, கோலி, ரோகித் சர்மா டுவிட்டரில் 'ப்ளூ டிக்' நீக்கம்

Published On 2023-04-21 04:54 GMT   |   Update On 2023-04-21 04:54 GMT
  • ஏப்ரல் 20-ந்தேதிக்குள் சந்தா கட்டணம் செலுத்தாத டுவிட்டர் கணக்கில் புளூ டிக்குகள் நீக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்தார்.
  • மேலும் சில கிரிக்கெட் வீரர்களின் கணக்குகளில் புளூ டிக் அகற்றப்பட்டு உள்ளது.

மும்பை:

பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை உலக பணக்காரான எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.

இதில் பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர் கணக்கில் 'புளூ டிக்' பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தியாவை சேர்ந்த பயனர்கள் மாதம் ரூ.900 சந்தா செலுத்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஏப்ரல் 20-ந்தேதிக்குள் சந்தா கட்டணம் செலுத்தாத டுவிட்டர் கணக்கில் புளூ டிக்குகள் நீக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்தார்.

அதன்படி சந்தா கட்டணம் செலுத்தாத டுவிட்டர் கணக்குகளில் புளூ டிக் நீக்கப்பட்டன. இதில் கிரிக்கெட் வீரர்கள் டோனி, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரின் டுவிட்டர் கணக்கில் புளூ டிக் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் சில கிரிக்கெட் வீரர்களின் கணக்குகளில் புளூ டிக் அகற்றப்பட்டு உள்ளது.

இதே போல பிரபல அரசியல் தலைவர்கள், நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள் என பலரின் டுவிட்டரில் புளூ டிக்குகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

Similar News