கிரிக்கெட் (Cricket)

ஜோ ரூட், ஹாரி புருக் சதம்: வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற 385 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து

Published On 2024-07-21 14:34 GMT   |   Update On 2024-07-21 14:34 GMT
  • 2வது இன்னிங்சில் இங்கிலாந்து 425 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
  • ஹாரி புரூக், ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி சதமடித்தனர்.

நாட்டிங்காம்:

இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஒல்லி போப் 121 ரன்னும், பென் டக்கெட் 71 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 69 ரன்னும் எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட், ஜெய்டன் சீலஸ், சின்க்ளெர், ஹாட்ஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 457 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கவெம் ஹாட்ஜ் சதமடித்து 120 ரன்னில் அவுட் ஆனார். ஜோஷ்வா டா சில்வா 82 ரன்னும், அலிக் அத்தானாஸ் 82 ரன்னும், பிராத்வைட் 48 ரன்னும் எடுத்தனர்.

இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டும், கஸ் அட்கின்சன், சோயப் பஷீர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 41 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2வது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 76 ரன்னும், ஒல்லி போப் 51 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஹாரி புருக் சதமடித்து 109 ரன்னும், ஜோ ரூட் சதமடித்து 122 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

இறுதியில், இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 425 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீலஸ் 4 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 385 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.

Tags:    

Similar News