ஆன்மிக களஞ்சியம்

1400 ஆண்டுகள் பழமையான மூலவர் தரிசனம்

Published On 2024-08-27 12:16 GMT   |   Update On 2024-08-27 12:16 GMT
  • சித்திரையில் பெருவிழா நடைபெறுகின்றது. கொடியேற்றம், யாகசாலை முதலியன மலைமீது நிகழும்.
  • திருவிழாக்கள், அனைத்தும் தாழக்கோவிலில்தான்.

சிவலிங்கத் திருமேனி (பக்தவத்சலேசுவரர்.) சதுரபீட ஆவுடையாரில் அமைந்துள்ள அழகான மூர்த்தம்.

கருவறை 'கஜப்பிரஷ்ட' அமைப்புடையது.

கோஷ்டமூர்த்தங்களாக, விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை, ஆகியோர் உளர்.

சண்டேஸ்வரர் உள்ளார். மறுபக்கத்தில் தீர்த்தக் கிணறு உள்ளது.

நித்திய வழிபாடுகள் செம்மையாக நடைபெறுகின்றன.

சித்திரையில் பெருவிழா நடைபெறுகின்றது. கொடியேற்றம், யாகசாலை முதலியன மலைமீது நிகழும்.

திருவிழாக்கள், அனைத்தும் தாழக்கோவிலில்தான்.

சித்திரைப் பெருவிழாவில், மூன்றாம் நாள் உற்சவத்தில் காலையிலும், பத்தாம் நாள் விழாவில் இரவிலும், சுவாமி அதிகாரநந்தியிலம், பஞ்சமூர்த்திகளுடன் முறையே எழுந்தருளி மலைவலம் வருவதும் வழக்கம்.

அடிவாரத்தில் மாமல்லபுரம் போகும் பாதையில் நால்வர்கோவில் உள்ளது.

இப்பகுதி 'நால்வர் கோவில்பேட்டை' என்று வழங்குகிறது.

கல்வெட்டில் இத்தலம் 'உலகளந்த சோழபுரம்' என்று குறிப்பிடப்படுகிறது.

தொண்டை நாட்டுக்குரிய 24 கோட்டங்களுள் இது களத்தூர்க் கோட்டத்தைச் சார்ந்தது.

7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர். சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.

சென்னையிலிருந்து 67 கி.மீ தொலைவில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோவில் 1400 ஆண்டுகள் பழமையானது.

இங்கு காணப்படும் ஒரு கல் மண்டபம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி. 610-640) காலத்தில் கட்டப்பட்ட சிவனுக்குரிய குடைக்கூளி என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்களும் இங்கே கிடைத்துள்ளன.

Tags:    

Similar News