ஆன்மிக களஞ்சியம்

அபூர்வ சக்தி கொண்ட கருட மந்திரம்

Published On 2024-10-23 11:59 GMT   |   Update On 2024-10-23 11:59 GMT
  • ராமாயணப் போரில் லட்சுமணன் நாகாஸ்திரத்தினால் கட்டுண்ட போது அவரை கருடன் விடுவித்தார்.
  • அமுத கலசத்தைப் பெற கருடன் இந்திரனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றார்.

ஸ்ரீ கருடனுக்கு ஐந்து எழுத்துக்கள் கொண்ட 'பஞ்சவர்ணீ' என்ற மந்திரம் இருக்கிறது.

கட மந்திரமான 'கருட பஞ்சாட்சரி'க்கு உடனே பலன் தரும் அபூர்வ சக்தி உண்டு.

இந்த மந்திரம் 'காருட பிரம்ம வித்யா' என்ற மற்றொரு பெயராலும் அழைக்கப்படுகிறது.

திருமாலுக்கு எதிரே எல்லாக் கைங்கரியங்களையும் செய்வதற்குக் கூப்பிய கரங்களுடன் ஸ்ரீ கருடன் நிற்பதை வைணவ ஆலயங்களில் காணலாம்.

ராமாயணப் போரில் லட்சுமணன் நாகாஸ்திரத்தினால் கட்டுண்ட போது அவரை கருடன் விடுவித்தார்.

அமுத கலசத்தைப் பெற கருடன் இந்திரனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றார்.

தோற்றுப் போன இந்திரன் கருடனைப் பாராட்டி அவருக்கு 'சுபர்ணன்' என்ற பெயரைச் சூட்டினான்.

'கருடோப நிஷத்தை ஆறு மாதம் தியானம் செய்பவன் கருட பகவானுக்குச் சமமாகிப் பார்வையாலேயே உலகை வசம் செய்வான்.

சந்திரகாந்தப் பிரதிமை போன்ற தேவியின் தியானத்தால், எல்லா வித ஜூரங்களையும் விஷயங்களையும் போக்கும் வல்லமை பெறுவான்' என்று கருட உபநிஷத்தின் பலன் கூறுகிறது.

அதிகாலையில் அருணோதய சமயத்தில் கருடனைத் தரிசித்தால் நினைத்த காரியம் கைகூடும்.

வியாழன் பஞ்சமியில் சுவாதி நட்சத்திரத்தில் 'கருட பஞ்சாத்' படிப்பது அமோக பலனைத் தரும்.

சுவாதியில் மாலை நேர கருட தரிசனம் மிகவும் விசேஷம்.

பத்ம புராணத்திலுள்ள நான்கு பாடல்கள் கருடன் அருளால் மனிதர்களுக்கு ஏற்படும் பல அபூர்வ சக்திகளைப் பற்றி கூறுகின்றன.

அவை வருமாறு:

பிறரை வசியம் செய்தல், பகைவர்களை அடக்குதல், உணர்வை வற்ற செய்தல், வானத்தில் உலாவுதல், இந்திர ஜாலம் காட்டுதல், படிப்பில் தேர்ச்சி நல்ல நினைவாற்றல், வாதத்திலும் போரிலும் வெற்றி பெறுதல் போன்றவை சித்திக்கும்.

வீட்டுக்குள் பாம்பு தென்பட்டால் கருடனை நினைத்து தியானித்து கைகளைத் தட்டினால் அங்கிருந்து பாம்பு சென்று விடும்.

ஸ்ரீ கருட பகவானைத் தனியாக வணங்கும் போது பின்வரும் துதியைச் சொல்லி வணங்குவது மிகவும் விசேஷம்.

'கருடாய நமஸ்துய்யம் ஸர்து

சர்பேந்த்ர சத்ரவே!

வாஹனாயா மஹாவிஷ்ணோ!

தார்சஷ்யாய அமித தேஜயே!

Similar News