ஆன்மிக களஞ்சியம்

நலம் தரும் நாக சதுர்த்தி விரதம்

Published On 2024-10-23 09:19 GMT   |   Update On 2024-10-23 09:19 GMT
  • சிலர் உடன்பிறந்தவர்களுக்காக நாக சதுர்த்தி விரதம் காக்கின்றனர்.
  • புற்றுக்குப் பால் வார்த்து, புற்று மண்ணையே கவசக்காப்பாக அனைவரும் நெற்றியில் இட்டுக்கொள்கின்றனர்.

ஆடி மாதம் வளர்பிறைச் சதுர்த்தியில் மகளிர் விரதமிருந்து நாகத்தை வழிபடுவது நாக சதுர்த்தி விரதம்.

இதனால் நாக தோஷங்கள் அகலும், மகப்பேறு கிடைக்கும்.

நாக சதுர்த்தியன்று நாகக்கல்லைப் பிரதிஷ்டை செய்தால் மகப்பேறு கிடைப்பது உறுதி.

விரதப்பயனால் பிறந்த குழந்தைகளுக்கு நாகசாமி, நாகப்பன், நாகராஜன், நாகலட்சுமி, நாகம்மை என்று நாகத்தின் பெயர்களைச் சூட்டுகின்றனர்.

சிலர் உடன்பிறந்தவர்களுக்காக நாக சதுர்த்தி விரதம் காக்கின்றனர்.

புற்றுக்குப் பால் வார்த்து, புற்று மண்ணையே கவசக்காப்பாக அனைவரும் நெற்றியில் இட்டுக்கொள்கின்றனர்.

வடநாட்டில் கொண்டாடப்படுகிற ராக்கி அல்லது ரட்சாபந்தனுக்கு நிகரானது நாக சதுர்த்தி விரதம்.

Similar News