அகல்விளக்கும் எண்ணெயும் தயார்! தீபம் ஏற்ற வாருங்கள்!!
- திருக்கழுக்குன்றத்தில் சங்குதீர்த்தத்தில் புனித நீராடல் முடிந்த பிறகு மாலை 6 மணிக்கு லட்சத்தீபம் ஏற்றும் திருவிழா நடைபெறும்.
- லட்சத்தீபம் ஏற்றியபிறகு சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.
திருக்கழுக்குன்றத்தில் சங்குதீர்த்தத்தில் புனித நீராடல் முடிந்த பிறகு மாலை 6 மணிக்கு லட்சத்தீபம் ஏற்றும் திருவிழா நடைபெறும்.
திருக்கழுக்குன்றத்து மலைக்கோவில், தாழகோவில் மற்றும் 12 தீர்த்தங்கள், மாடவீதிகள் உள்பட பல்வேறு பகுதிகளில் லட்சத்தீபம் ஏற்றப்படும்.
இதற்காக லட்சத்திற்கும் மேற்பட்ட அகல்விளக்குகளை பல்வேறு உபயதாரர்கள் கோவிலுக்கு வாங்கி கொடுப்பர்.
அதுபோல லட்சத்தீபம் ஏற்றுவதற்கு தேவையான எண்ணெயையும் நிறைய உபயதாரர்கள் வாங்கி அன்பளிப்பாக கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பர்.
எனவே லட்சத்தீபங்களை ஏற்றுவதற்கு தேவையான அகல்விளக்குகள், திரிகள், எண்ணெ தயார் நிலையில் இருக்கும்.
பக்தர்களுக்கு அவை வழங்கப்படும். தேவையான அளவிற்கு அகல்விளக்குகளை வாங்கி பக்தர்கள் தங்கள் கைப்பட தீபம் ஏற்றலாம். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையே இந்த வாய்ப்பு கிடைக்கும்.
லட்சத்தீபம் ஏற்றியபிறகு சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெறும். அதன்பிறகு வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளும் வீதி உலா வருவார்கள்.
அதை தரிசித்துவிட்டு வீடு திரும்பினால் அளவற்ற பலன்கள் கிடைக்கும்.