அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் தரும் தேவி வழிபாடு
- பகைவர் தொல்லைகள் அறவே தீரும். கெட்டவர்களின் சேர்க்கை இல்லாது போகும். தீவினைகள் நெருங்காது.
- அனைத்து தோஷங்களும் விலகி ஓடும். நல்ல எண்ணங்கள் பிறக்கும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் கைகூடும்.
பில்லி, சூனியம், ஏவல், செய்வினைகள் போன்ற அனைத்து தீயவினைகளையும் தீர்ப்பவள் பிரத்யங்கரா தேவி.
இவள் பத்ரகாளியின் சொரூபம்.
பிரத்யங்கரா தேவி பிரத்யங்கரஸ், பால பிரத்யங்கரா, பிராம்பி பிரத்யங்கரா, ருத்திர பிரத்யங்கரா, உக்கிர பிரத்யங்கரா, அதர்வண பிரத்யங்கரா,பிராம்மி பிரத்யங்கரா, சிம்ம முகக் காளி, ஸ்ரீ மகா பிரத்யங்கரா என ஒன்பது விதமாக வழிபடப்படுகிறாள்.
கலியுகக் கடவுளான இவளை உபாசிப்பவர்கள் கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்குவர்.
இவளை பூஜிப்பவரை, தம்மை பூஜிப்பவரகளாகவே தேவர்கள் எண்ணி அருள்பாலிப்பர்.
தேவியை பூஜிப்பவர் பிரம்மன், விஷ்ணு, சிவன், கௌரி, லஷ்மி, விநாயகர் அனைவரையும் பூஜித்த பலன்களை பெறுவர்.
உக்கிர தெய்வமாக காணப்பட்டாளும் இவளது திருவுருவத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.
இவளது மூல மந்திரத்தை ஜெபித்து துவங்கி இவளது தியான மந்திரம், அஷ்டகம், பஞ்சகம் சொல்லி தினமும் வழிபட குடும்பத்தில் அமைதி நிலவும்.
பகைவர் தொல்லைகள் அறவே தீரும். கெட்டவர்களின் சேர்க்கை இல்லாது போகும். தீவினைகள் நெருங்காது.
அனைத்து தோஷங்களும் விலகி ஓடும்.
நல்ல எண்ணங்கள் பிறக்கும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் கைகூடும்.
அமாவாசை, பௌர்ணமி தினங்களில் நடைபெறும் யாகத்தில் கலந்து கொள்வதும், இவளுக்கு மிகவும் பிரீத்தியான மிளகாயுடன் தரிசனம் செய்வதும் மிகச் சிறந்த பலன்களை தரும்.
உக்கிர தேவியான இவளுக்கு மிளகாய், மிளகு போன்ற காரமான பொருட்கள் மிகவும் பிடித்தமானது.