ஆன்மிக களஞ்சியம்

அறிவியல் சீர்திருத்தங்களை பரப்பிய ராமானுஜர்

Published On 2024-09-02 11:11 GMT   |   Update On 2024-09-02 11:11 GMT
  • எல்லா வைணவக் கோவில்களிலும், வடமொழியுடன் சேர்ந்து தமிழ் மணமும் கமழத் தொடங்கியது.
  • ஆனால் , திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் பொறுப்பை ஏற்றிருந்த நம்பூதிரிகள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

திருநகரியை அடைந்த பின்னர் அவர் மதுரகவி ஆழ்வார் அவதரித்த திருக்கோளூர், திருக்குறுங்குடி, இப்போது திருப்பதிசாரம் என்று அழைக்கப்படும் திருவண்பரிசாரம் முதலிய தலங்களுக்குத் தீர்த்த யாத்திரை செய்தார்.

பிறகு, திருவட்டாறு சென்று, அங்கிருந்து திருவனந்தபுரம் அடைந்தார்.

ராமானுஜர் விஜயம் செய்த எல்லா வைணவக் கோவில்களிலும், திருவரங்கத்தில் செய்ததைப் போன்றே, வழிபாட்டு முறைகளிலும், கோவில் நிர்வாகத்துறைகளிலும் சீர்திருத்தங்களைப்புகுத்தினார்.

எல்லாக் கோவில்களிலும் சமஸ்கிருத மந்திரங்களைக் கோஷிப்பது போன்றே ஆழ்வார்களின் பாடல்களையும் கர்ப்பக்கிரகத்தில் ஓத வேண்டும் என்றும் வரையறை செய்தார்.

எல்லா வைணவக் கோவில்களிலும், வடமொழியுடன் சேர்ந்து தமிழ் மணமும் கமழத் தொடங்கியது.

ஆனால் , திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் பொறுப்பை ஏற்றிருந்த நம்பூதிரிகள் ராமானுஜர் அறிவித்த சீர்திருத்தங்களை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள்.

பின்னர், மேற்குக்கடற்கரை வழியாக வடநாடு சென்ற, துவாரகை முதலிய தலங்களைத் தரிசித்தார்.

Tags:    

Similar News