ஆன்மிக களஞ்சியம்

தர்மம் செய்த புண்ணியம் கோடியாக பெருகும்

Published On 2024-08-23 11:33 GMT   |   Update On 2024-08-23 11:33 GMT
  • தருமமோ என்றால் ஒன்று செய்தாலும் அது கோடியாய் பெருகும்.
  • அந்த காரணத்தினால் இது ‘தரும கோடித்தலம்’ என்று பெயர் பெற்றது.

தேவர்களும், முனிவர்களும் தங்கள் தங்கள் குறைகளை இத்தலத்தில் தவம் இருந்து போக்கி கொண்டார்கள்.

இத்தன்மையுள்ள வேதகிரியைச் சூழ்ந்துள்ள ஏழரைக்காத எல்லையிலும் செய்கின்ற பந்தமாகியபாதகங்கள் செய்தது எவ்வளவோ அவ்வளவில் பொருந்தும்.

தருமமோ என்றால் ஒன்று செய்தாலும் அது கோடியாய் பெருகும்.

அந்த காரணத்தினால் இது 'தரும கோடித்தலம்' என்று பெயர் பெற்றது.

கங்காநதி நீங்காத சடை முடியையுடைய பரமசிவம் வீற்றிருந்து அருளும் காரணத்தால் 'சிவபுரம்' என்று சொல்லப்படுகிறது.

ஒரு தடவை சொன்னா 100 கோடி தடவை சொன்ன மாதிரி!

சிவபெருமான் திருவாலங்காட்டில் காளியினுடைய வாதாட்டத்தினைக் கெடுத்து, ஊர்த்துவ தாண்டவம் செய்து இந்த வேதகிரியில் வந்து இளைப்பாறினார்.

உருத்திர கோடி என்று மகிழ்ச்சியுடன் ஒருதரம் சொன்னால் அது நூறு கோடி முறை ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியதற்கு ஒப்பாகும்.

Tags:    

Similar News