ஆன்மிக களஞ்சியம்
null

ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில்

Published On 2024-08-02 12:06 GMT   |   Update On 2024-08-05 08:42 GMT
  • பன்னிரண்டு சிவஸ்தலங்களில் கடைசியாக இருப்பது ஏகாம்பரேஸ்வர் திருக்கோவில்.
  • கும்பகோணத்திற்குள் இருக்கும் இந்த கோவிலைப் பற்றி புராணங்களில் அங்கங்கே லேசாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பன்னிரண்டு சிவஸ்தலங்களில் கடைசியாக இருப்பது ஏகாம்பரேஸ்வர் திருக்கோவில்.

கும்பகோணத்திற்குள் இருக்கும் இந்த கோவிலைப் பற்றி புராணங்களில் அங்கங்கே லேசாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எல்லா சிவன் கோவில்களில் காணப்படும் நெறிமுறைகள் இங்கு இருக்கிறது.

மாசி மகப் பெருவிழா அன்று ஏகாம்பரேஸ்வரர் உத்சவர் மகாமகக் குளத்திற்கு எழுந்தருளுகிறார்.

இக்கோவில் நகரின் மையப்பகுதியில் உள்ளது.

கோவிலில் உள்ள ராஜகோபுரம் நான்கு நிலைகளைக் கொண்டு அழகுற அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலில் உள்ள இறைவன் ஏகாம்பரேஸ்வரர், இறைவி காமாட்சியம்மன்.

அலங்கார நாயகன் ஏகாம்பரேஸ்வரர் நான்கு கரங்களுடன் நின்ற வடிவில் அற்புதமாகக் காட்சியளிக்கிறார்.

அம்மன் சன்னதியின் இரு புறமும் அழகுற தீட்டப்பட்டுள்ள காயத்ரிதேவியின் திருவுருவமும், காமாட்சியம்மனின் ஓவியமும் அழகின் அற்புதமாகக் காண்போரை ரசிக்கத் தூண்டுகிறது.

மகாமண்டபத்தின் தெற்கு முகமாக நின்ற கோலத்தில் அபயம், வரதம், அங்குசம், கதை, நாகாஸ்திரம், பாசம், எச்சரிக்கை ஆகிய கரங்களுடன் எழுந்தருளி தெய்வீகக்கலை அழகுடனும் சிம்ம வாகனத்தில் துவாரபாலகியர் வாசலை அலங்கரிக்க கொலு வீற்றிருக்கிறார் காமாட்சியம்மன்.

Tags:    

Similar News