ஆன்மிக களஞ்சியம்

காஞ்சியில் ஸ்ரீ சங்கரர் நினைவுச் சின்னங்கள்

Published On 2024-08-28 12:03 GMT   |   Update On 2024-08-28 12:03 GMT
  • காஞ்சியில் புண்ணிய கோடி ஆலயத்தில் சங்கரரது சிற்பச்சிலை.
  • விஷ்ணு காஞ்சியில் அனந்தசரஸ் குளத்தின் தெற்கே நான்கு தூண் மண்டபத்தில் சங்கரரது சிற்பச் சிலை.

காஞ்சியில் சங்கரர் வாழ்ந்ததை நினைவூட்டும் வகையில் காஞ்சியைச் சுற்றிலும் உள்ள கோவில்களிலும், காஞ்சி மாநகரின் உட்புறமுள்ள சிவ, விஷ்ணு ஆலயங்களிலும், அதன் சுற்று வட்டாரங்களிலும் சங்கராச்சாரியார் உருவத்தை வெளிப்படுத்தும் சிற்பங்கள், கல்வெட்டுகள், எழுத்துப் பொறிப்புகள், சிலா பிம்பங்கள் போன்ற எண்ணற்ற சான்றுகள் உள்ளன.

1. காமாட்சி கோவிலின் கர்ப்ப கிரகத்திற்கு வடகிழக்கே சற்று உயரத்திலுள்ள மண்டபத்தில் சங்கரரது ஜீவகளையுள்ளது போல் ஒரு சிற்பம்.

2. யாத்ரோத்சவ காமாட்சி, பங்காரு காமாட்சி அம்மன்களின் சிற்றாலயங்களிலும் செதுக்கு வேலைகொண்ட சங்கரரின் உருவங்கள்.

3. குமர கோஷ்டத்தில் சங்கரரது சிற்பம்.

4. காஞ்சியின் அண்மையில் சிவலிங்க மேட்டுக்கோவிலில் சங்கரர் சிற்பச் சிலை.

5.காஞ்சியில் புண்ணிய கோடி ஆலயத்தில் சங்கரரது சிற்பச்சிலை.

6.விஷ்ணு காஞ்சியில் அனந்தசரஸ் குளத்தின் தெற்கே நான்கு தூண் மண்டபத்தில் சங்கரரது சிற்பச் சிலை.

7. காஞ்சி வைகுண்ட பெருமாள் ஆலயத்தில் சங்கரர் சிற்பச் சிலை.

8. வைணவர்களின் தலை சிறந்த கோவில்களில் ஒன்று ஸ்ரீரங்கம் என்பது உலகறிந்த உண்மை. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சங்கரர் சிற்பம் சந்திர புஷ்கரணி கரையில் உள்ளது.

9. சென்னையருகில் திருவொற்றியூர் சங்கர மடத்தில் பூஜை செய்யும் புனித இடத்தில் உள்ள சுவர் ஒன்றில் தனது நான்கு பிரதான சிஷ்யர்களோடு சங்கராச்சாரியார் அமர்ந்திருக்கும் காட்சி.

10. விஷ்ணு காஞ்சி வரதராஜர் கோவிலுக்குள் பெருந்தேவி அம்பாள் கர்ப்ப கிரகத்திற்குள் நுழையும் வழிக்கு அருகிலுள்ள பெரிய கற்றூண்களைத் தாங்கும் உத்திரத்தை ஆசனமாக கொண்ட உட்கார்ந்த நிலையிலுள்ள வியாசர் கற்சிலையும் அண்மையிலேயே சிறு கற்றூண்கள் தாங்கும் சிறிய உத்திரத்தின் மீது சங்கரர் கை கூப்பி நிற்கும் நிலையிலும் சிற்பம் உள்ளது.

செவிலிமேடு, பாப்பான் சாவடி, பூவிருந்தமல்லி போன்ற ஊர்களின் ஆலயங்களில் சங்கரரை நினைவூட்டும் சான்றுகள் எண்ணற்றவை காணக்கிடக்கின்றன.

Tags:    

Similar News