ஆன்மிக களஞ்சியம்

கூரத்தாழ்வாரும் ராமானுஜரும்

Published On 2024-09-03 11:03 GMT   |   Update On 2024-09-03 11:03 GMT
  • ஆனால் ராமானுஜர் சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் சிந்தித்தார்.
  • கூரத்தாழ்வார் எழுத மறுத்த அந்த வாக்கியத்தைப் பற்றி யோசித்த போது தன்னுடைய தவறு புரிந்தது.

ஆனால் அந்த நாட்டு பண்டிதர்களோ இதனால் மிகவும் பகைமை கொண்டனர்.

ராமானுஜரை பின்தொடர்ந்து கண்காணித்து அந்த நூலை அவரிடம் இருந்து திருடிக் கொண்டு போய்விட்டதும் ராமானுஜர் கலங்கிப் போனார்.

இதனைக்கண்ட கூரத்தாழ்வார், "தேவரீர் தயவு செய்து கலங்க வேண்டாம்.

நான் ஒருமுறை அந்த நூல் முழுவதையும் படித்துவிட்டேன்.

தாங்கள் களைத்துப்போய் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நான் அதைப்படித்தேன்.

அதில் உள்ள பொருட்களை இப்போதே சொல்ல வேண்டுமா அல்லது இரண்டாற்றுக்கிடையே வந்து சொன்னால் போதுமா" என்று கேட்டார்.

ராமானுஜர் கூரத்தாழ்வாரின் கல்வி நினைவாற்றல் கண்டு மெய்சிலிர்த்தார்.

"கூரத்தாழ்வாரே ! நான் சொல்லச்சொல்ல நீர் பாஷ்ய வாக்கியங்களை எழுதிக்கொண்டே வாரும்.

நான் சொல்லும் வாக்கியங்களுக்கும் உமது நினைவில் இருக்கும் வாக்கியங்களுக்கும் ஏதேனும் முரண் இருப்பதாக புலப்பட்டால் நீர் எழுதுவதை நிறுத்திவிடும்" என்ற ராமானுஜர் கூறவும் அவரும் சம்மதமாய் எழுதத்தொடங்கினார்.

ராமானுஜர் சொல்லச்சொல்ல எழுதிக்கொண்டே வந்த கூரத்தாழ்வார் ஒரு சமயம் எழுதுவதை நிறுத்திவிட்டார்.

ராமானுஜர் கூறியது பக்தி மார்க்க மதமாகிய விசிஷ்டாத் வைத கொள்கைக்கு முரணாக இருந்ததால் தான் கூரத்தாழ்வார் அப்படி எழுதுவதை நிறுத்தியபடி இருந்தார்.

இராமானுஜர் அதனைக்கண்டு கடும் கோபம் கொண்டார்.

"நான் சொன்னதை எழுத உமக்க இஷ்டம் இல்லையென்றால் நீரே பாஷ்யம் எழுதிக்கொள்ளும்" என்று ராமானுஜர் எழுந்து போய்விட்டார்.

ஆனால் ராமானுஜர் சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் சிந்தித்தார்.

கூரத்தாழ்வார் எழுத மறுத்த அந்த வாக்கியத்தைப் பற்றி யோசித்த போது தன்னுடைய தவறு புரிந்தது.

அதன்பின் அந்த வாக்கியத்தை திருத்திச்சொல்ல கூரத்தாழ்வார் எழுதத்துவங்கினார்.

Tags:    

Similar News