ஆன்மிக களஞ்சியம்

குலம் செழிக்க வைக்கும் வழிபாடு

Published On 2024-08-05 08:30 GMT   |   Update On 2024-08-05 08:30 GMT
  • பங்குனி மாதத்திற்கு உண்டான தனிச்சிறப்பு நம்மை ஒன்று படவைப்பதாக அமைகின்றது.
  • பங்குனி உத்திரம் பல குடும்பங்களின் குல தெய்வங்களை தேடி சென்று வழிபடும் நன்நாளாக அமைகின்றது.

பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் சேரும் நாள் நட்சத்திரத்தால் பவுர்ணமியின் பலன் கூடுதலாக அமையும் நாளாக அமைகின்றது.

ஒவ்வொரு மாதத்தின் பவுர்ணமி வெவ்வேறு சிறப்புகளை நமக்கு தருவதாக அமைகின்றது.

அதில் பங்குனி பவுர்ணமி குடும்ப ஒற்றுமையை உணர்த்தும் நாளாக அமைவது தனிச்சிறப்பு.

பொதுவாக `பங்குனி உத்திரம்' என நட்சத்திரத்துக்கு சிறப்பு தரும் பவுர்ணமி நாள் என்றவுடன் அனைவரது உள்ளமும் குதூகலம் அடையக் காரணம் முருகனுக்கு விழா எடுக்கும் நாள் என்ற சிறப்பை பெறுகின்றது.

தமிழ் கடவுள் சுப்பிரமணியின் ஆலயங்கள் அனைத்தும் விழா கோலம் அடையும் தினம் என்று மட்டுமே பலர் அறிந்து வைத்திருப்போம்.

இந்நாளில்தான் தெய்வத் திருமணங்கள் நடைபெற்றுள்ளது என்று நமது புராணங்கள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன.

எனவேதான் பங்குனி மாதத்தில் நம் குடும்பங்களில் திருமண சடங்குகளை நாம் நடத்துவதில்லை.

பங்குனி மாதத்திற்கு உண்டான தனிச்சிறப்பு நம்மை ஒன்று படவைப்பதாக அமைகின்றது.

பங்குனி உத்திரம் பல குடும்பங்களின் குல தெய்வங்களை தேடி சென்று வழிபடும் நன்நாளாக அமைகின்றது.

பங்குனி உத்திரம் அன்று நாம் நம் குலதெய்வங்களை வழிபட உகந்த நாளாக அமைகின்றது.

இந்நாளில் நமது குலதெய்வ கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வது நம் குலம் சிறக்க உதவுகின்றது.

நாம் நம்குல தெய்வங்களை இந்த நாளில் சென்று வழிபாடு செய்தால் நமது மூதாதையரின் பரிபூரண ஆசிகள் நமக்கு கிடைக்கின்றது.

Tags:    

Similar News