ஆன்மிக களஞ்சியம்

பாவம்போக்கும் தீர்த்தங்கள்

Published On 2024-08-23 11:19 GMT   |   Update On 2024-08-23 11:19 GMT
  • வடக்குத்திக்கில் வசிட்ட தீர்த்தம் என்று ஒன்றிருக்கிறது.
  • தென்மேற்குத்திக்கில் மெய்ஞானம், அகத்தியம், மார்க்கண்டம், கோசிகம் என நான்கு தீர்ததங்கள் உள்ளன.

திருக்கழுக்குன்றம் தலத்தில் மொத்தம் 12 தீர்த்தங்கள் உள்ளன.

நகரின் கிழக்குத்திசையில் ஏழு தீர்த்தங்கள் இருக்கின்றன. தென்கிழக்கில் சம்பு தீர்த்தம், உருத்திர தீர்த்தம் என்று இரண்டு தீர்த்தங்கள் இருக்கின்றன.

வடக்குத்திக்கில் வசிட்ட தீர்த்தம் என்று ஒன்றிருக்கிறது.

தென்மேற்குத்திக்கில் மெய்ஞானம், அகத்தியம், மார்க்கண்டம், கோசிகம் என நான்கு தீர்ததங்கள் உள்ளன.

மேற்குத்திக்கில் நந்தி, வருணன் என இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.

வடமேற்கில் அகலிகை என்றொரு தீர்த்தம் உண்டு.

இந்த மலையின் உச்சியில் நாங்களிருவரும் கண்டதாகிய சம்பாதித் தீர்த்தம் என்று எங்கள் பெயரால் ஒன்றிருக்கிறது.

மன்னனே! இத்தீர்த்தங்களைப் பார்த்தாலும் அள்ளித் தெளித்துக் கொண்டாலும் கணப்பொழுது மூழ்கினாலும் அங்கே போய் கால்சறுக்கி விழுந்தாலும் பரந்த அத்தீர்த்தத்தில் ஒரு துளி தெளித்தாலும் அதில் பறந்து வருகின்ற காற்று மேலே பட்டாலும் பாதகங்கள் எல்லாம் நீங்கிப்போகும்.

தேவர்கள் தொழத்தக்க இந்த தீர்த்தங்கள் தோறும் நீர் மோண்டு கொண்டு ஒரு அடி எடுத்து வைத்துச்செல்லுதல் ஒரு அசுவமேக யாகத்தை செய்ததாகும். விரதம் அனுஷ்ட்டிப்பவர்கள் இந்த தீர்த்தத்தில் மூழ்கி அனுஷ்ட்டித்தால் ஆனந்தமாகப் பலன் அளிக்கும்.

Tags:    

Similar News