ஆன்மிக களஞ்சியம்

பரமேஸ்வரியே சொக்கம்மாளாக வளர்ந்ததை செட்டியாருக்கு உணர்த்திய பெருமான்

Published On 2024-08-23 12:00 GMT   |   Update On 2024-08-23 12:00 GMT
  • வேதகிரியை வலம் வந்த பிறகு தான் யோசிக்க வேண்டும் எனக்கூற அங்குள்ள யாவரும் ஆம்! அப்படியே செய்வது தான் நலம் என்றார்கள்.
  • நின் அன்புக்கு வேண்டி உம்மிடம் பரமேஸ்வரியே குழந்தையாக வளர்ந்து வந்தாள்.

பின்னர் அன்னதானம், சொர்னதானம் முதலிய 32 தானங்களும் அவரவர் விரும்பியபடி வேண்டும் அளவிற்கு கொடுத்து நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்த்து வந்தார்கள்.

அப்படி வளர்ந்த தங்களுடன் உள்ள முதியோர் பந்துக்கள் சேர்ந்து நல்ல தினத்தில் திருமணம் முடிக்க ஆலோசனை செய்து கொண்டிருக்கும் சமயம் தேவியாருக்கு பூர்வக்கியானம் வந்து தந்தையாரை நோக்கி அப்பா!

வேதகிரியை வலம் வந்த பிறகு தான் யோசிக்க வேண்டும் எனக்கூற அங்குள்ள யாவரும் ஆம்! அப்படியே செய்வது தான் நலம் என்றார்கள்.

உடனே வணிகர்கோன் "திருமலை சொக்கமாள் "என்னும் திருத்தேவியை அழைத்துக்கொண்டு "திருக்கழுகுன்றம்" என்னும் திவ்ய ஷேத்திரம் அடைந்து திவ்ய தீர்த்தமாகிய சங்குத்தீர்த்ததில் நீராடி வேதமலையை வலம் வரும் போது தந்தையார் முன்னும் அம்மையார் பின்னுமாகிய மலைக்கு வடக்கு திசையில் செல்லும் போது ஒருபாறை மீது வேதகிரி பெருமான் அமர்ந்து இருப்பது அம்மையாருக்கு மட்டும் தோன்ற அம்மையார் அடையும் இடம் வந்ததை உனர்ந்து பெருமானிடம் நெருங்கி பூமியைக் கிளறி நிற்க வேதகிரிபெருமான் தேவியை அழைத்துக் கொண்டு மலைமீது ஒரு சார்பில் தங்கவும்; முன்னே சென்ற செட்டியார் திரும்பி பார்த்து குழந்தையைக் கானாது திகைத்து மயங்கி முன்னும் பின்னுமாக ஓடி ஒடி தேடியும் கானமையால் ஓவெனக்! கதறிய வண்ணமாக "திருமலைச் சொக்கம்மாள்" என்று பலமுறை கூவியழைக்க மலை மீது ஏன்! ஏன்! என்னும் குரல் கேட்க திசையறிந்து மலை மீதேறிப் பார்க்க சுவாமி முன்னும் அம்மையார் பின்னுமாக நிற்பதறிந்து ஓ வெனக் கதறிய வண்னம் மெய் சோர்ந்து அடியற்ற மரம் போல சுவாமி திருபாதத்தில் விழுந்து கதற பெருமான் ஏ அன்ப வருந்த வேண்டாம்.

நின் அன்புக்கு வேண்டி உம்மிடம் பரமேஸ்வரியே குழந்தையாக வளர்ந்து வந்தாள். இனி உம்முடன் வர மாட்டாள். வேண்டிய வரம் கேள் தருவோம் என திருவாய் மலர்ந்தார்.

Tags:    

Similar News