- மேலும் பிரத்தியங்கரா தேவியை தரிசித்தால் பில்லி, சூனியம், ஏவல் அண்டாது என்ற நம்பிக்கையும் உள்ளது.
- திருமணம் தள்ளி போகும் ஆண்கள், பெண்கள் கோவிலில் மஞ்சள், குங்குமம் வைத்து அபிஷேகம் செய்தால் பிரச்சினைகள் தீரும்.
புதுவை பகுதியில் அமைந்துள்ள பிரபலமான கோவில்களில் ஒன்றாக பிரத்தியங்கரா தேவி கோவிலும் உள்ளது.
புதுவை நகரில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மொரட்டாண்டி காட்டு பகுதியில் இந்த கோவில் அமைந்து உள்ளது.
இங்கு 72 அடி உயரம் உள்ள பிரமாண்டமான பிரத்தியங்கரா தேவி சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
இதன் அருகில் பூமியின் பாதாள அறையில் கோவில் அமைந்துள்ளது.
கோவில் நுழைவு வாயில் சிங்கத்தின் வாய்ப்போல அமைக்கப்பட்டுள்ளது.
அதன் வழியாக படியில் இறங்கி சென்று பாதாள அறையில் உள்ள சாமியை தரிசிக்க வேண்டும். பிரத்தியங்கரா தேவி கருவறை விமானம் பூர்ணமேடு வடிவில் அமைந்துள்ளது.
மயான பூமியை விரும்பும் பிரத்தியங்கரா தேவியின் கோவிலை சுற்றி 5 இடங்களில் மயான பூமி அமைந்துள்ளது.
கோவிலை வலம் வந்தால் ஆகம சாஸ்திரப்படி முதலில் பிரளயவிநாயகர் சன்னதி உள்ளது. அதை தொடர்ந்து இந்திரன், அக்னி, வாயு, வருணன், மேதா தட்சிணாமூர்த்தி, ஈசான்ய பகவான், துர்க்கை, வாஸ்து, புருஷன், யமதர்மராஜன் போன்ற பரிவார தேவதைகளின் சன்னதிகளும் சாஸ்திரப்படி அமைந்துள்ளன.
கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். புதுவை, தமிழ்நாடு மட்டும் அல்லாமல் கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
தினமும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்கள் தரிசிக்கலாம்.
வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் ராகுகால பூஜைகள் நடக்கிறது. பவுர்ணமி கழித்து வரும் தேய்பிறை அஷ்டமியில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பிரத்தியங்கரா யாகம் நடக்கிறது.
இதில் கலந்து கொள்பவர்களுக்கு வேண்டும் வரங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்.
செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு கால நேரத்தில் சிறப்பு பூஜை நடக்கிறது. இந்த பூஜையில் கலந்து கொண்டால் 64 திருஷ்டிகள் நிவர்த்தியாகும்.
மேலும் பிரத்தியங்கரா தேவியை தரிசித்தால் பில்லி, சூனியம், ஏவல் அண்டாது என்ற நம்பிக்கையும் உள்ளது.
திருமணம் தள்ளி போகும் ஆண்கள், பெண்கள் கோவிலில் மஞ்சள், குங்குமம் வைத்து அபிஷேகம் செய்தால் பிரச்சினைகள் தீரும்.
வேண்டுதல் நிறைவேறும் பக்தர்கள் ஆடி மாதம் வெள்ளிக் கிழமை பால்குடம், தீச்சட்டி ஏந்தியும் அலகு குத்தியும் வழிபாடு செய்கின்றனர்.