ஆன்மிக களஞ்சியம்

புத்திரப்பேறு மாங்கல்யப் பேறு அருளும் திருமலை சொக்கம்மன் கதை

Published On 2024-08-23 11:34 GMT   |   Update On 2024-08-23 11:34 GMT
  • அதன் பின் பல தான தருமங்களை செய்து திருவிழாக்களை கொண்டாடி மகிழ்ந்தனர்.
  • பின்னர் அக்குழந்தைக்கு என்ன பெயர் சூட்டலாம் என்று யோசிக்கும் நேரத்தில் “சொக்கம்மாள்” என அசரீயாய் ஒலித்தது.

மங்கயற்கரசி என்னும் திருநாமம் கொண்ட கற்புக்கரசியை பத்தினியாக உடைய தனக்கோட்டி செட்டியார் எனும் வணிகர் கோமான் அநேக தான தருமங்களைச் செய்தும் ஸ்தல தீர்த்த யாத்திரைகளை செய்தும் புத்திரபேரு இல்லாத குறையால் தானும் தன் பத்தினியாரும் மனக்கவலை அடைந்து வருந்தியிருந்தனர்.

வேதகிரி பெருமான் சிவனடியார் திருவுருவம் கொண்டு தமது இல்லம் வரக்கண்ட வணிகர் தன் பத்தினியோடு எதிர் கொண்டு அவரை அழைத்து வந்து தக்க ஆசனமளித்து அமர செய்தார்.

வேதகிரி இங்கெழுந்தருளியது பல ஜென்மங்களில் செய்த தவ பயனே ஆகுமென்று வணங்கி சுவாமிகள் திருவடி கமலங்களுக்கு சுகந்த நீராட்டி கலவைச் சாந்திட்டு நறு மலர்களால் அர்ச்சித்து சுவாமி இக்குடிசையில் திருவமுது செய்து அடியேன் எங்கள் குறை தவிர்த்து ஆட்கொள்ள வேண்டுமெனப் பிரார்த்தித்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து வேண்டி நிற்க, பெருமான் மனம் இறங்கி நீவீர் மேற்கே அடுத்துள்ள வேதகிரியை ஒரு மண்டலம் விதிப்படி பிரதஷனம் செய்து வர புத்திர பேரு உண்டாகுமென திருவாய் மலர்ந்து மறைந்தார்.

அவ்வண்ணமே வேதகிரியை இருவரும் வேத விதிப்படி ஒரு மண்டலம் பிரதஷனம் செய்து முடிவில் வேதகிரி பெருமானுக்கும், திருபுரசுந்தரியம்மைக்கும் விசேஷ அபிஷேக அலங்காரம் செய்து வைத்து அடியார்கட்கு அமுதூட்டி தமது இல்லம் சேர்ந்து துயில் எழுந்து பரமேஸ்வரியே குழந்தை உருவாய் தம் பக்கத்தில் இருக்கக் கண்டு கறையில்லா ஆனந்தம் பொங்கி இரு கரங்களில் ஏந்தி உச்சி மோந்து மார்புற தழுவுங்காலை ஆனந்தம் பொங்க இரு தனங்களிலும் பால் சுரக்க அம்மைக்கு பால் குடுத்தனர்.

அதன் பின் பல தான தருமங்களை செய்து திருவிழாக்களை கொண்டாடி மகிழ்ந்தனர்.

பின்னர் அக்குழந்தைக்கு என்ன பெயர் சூட்டலாம் என்று யோசிக்கும் நேரத்தில் "சொக்கம்மாள்" என அசரீயாய் ஒலித்தது.

அப்பெயரை கேட்ட அனைவரும் பரமானந்தம் கொண்டனர்.

திருமலையை வலம் வந்த காரணத்தினால் வந்த செல்வமாதலால் "திருமலைச் சொக்கம்மாள்" என்னும் திருநாமம் சூட்டி மூன்று முறை அழைத்தனர்.

Tags:    

Similar News