ஆன்மிக களஞ்சியம்

சங்கு தீர்த்தத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை பிறக்கும் சங்கு

Published On 2024-08-23 11:04 GMT   |   Update On 2024-08-23 11:04 GMT
  • இந்த தீர்த்தத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை சங்கு பிறக்கின்றது. சங்கு பிறக்கும் காலத்தில் இதில் நீராடுதல் மிகவும் விசேடம்.
  • இத்தீர்த்தத்தில் ஒரு மண்டலம் (40 நாட்கள்) நீராடி மலையை வலம் வந்தால் எல்லாவிதமான பிணிகளும் நீங்கும்.

திருச்சந்நிதிக்கு எதிரே சிறிது தூரத்தில் சங்கு தீர்த்தம் என்னும் குளம் உள்ளது. இது பெரியகுளம்.

இந்த தீர்த்தத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை சங்கு பிறக்கின்றது.

சங்கு பிறக்கும் காலத்தில் இதில் நீராடுதல் மிகவும் விசேடம்.

இத்தீர்த்தத்தில் ஒரு மண்டலம் (40 நாட்கள்) நீராடி மலையை வலம் வந்தால் எல்லாவிதமான பிணிகளும் நீங்கும்.

ஆனால் பாதுகாப்பு கருதி தற்போது யாரையும் நீராட குளத்துக்குள் அதிகாரிகள் அனுமதிப்பதில்லை.

இறையருள் மணக்கும் திருமுறைகளுள் இத்தலத்தை போற்றி திருஞானசம்பந்தர் ஒரு திருப்பதிகமும்,

திருநாவுக்கரசர் ஒரு திருப்பதிகமும் சுந்தரர் ஒரு திருப்பதிகமும், சுந்தரர் ஒரு திருப்பதிகமும், மாணிக்கவாசகர் திருக்கழுக்குன்றப் பதிகமும் அருளிச் செய்துள்ளனர்.

Tags:    

Similar News