ஆன்மிக களஞ்சியம்

சரண கோஷத்தின் மகத்துவம்

Published On 2024-11-18 11:55 GMT   |   Update On 2024-11-18 11:55 GMT
  • காட்டுப்பாதையில் சரண கோஷம் நமக்கு ஒரு பாதுகாப்பு.
  • படிகள் எற ஏற அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்து கொண்டே இருப்பார்கள் என்பது பலரும் அனுபவித்த உண்மை.

சபரிமலை என்றதும் "சாமியே சரணம் அய்யப்போ" என்ற சரண கோஷம் தான் காதுகளில் பாயும் மகத்துவம் மிக்க இந்த சரண கோஷத்தில் "ச" என்ற எழுத்து விரோதிகளை அழிக்கக்கூடியது"ர" என்ற உச்சரிப்பு ஞானம் தர வல்லது "ண" என்ற எழுத்து சாந்தம் அளிப்பது "சுவாமியே சரணம்" என்று அடி வயிற்றில் இருந்து நாம் எழுப்பும் ஒலியானது சக்தி, ஞானம், சாந்தம் ஆகிய மூன்றும் தருகிறது.

மேலும் சம் சரணாகதி கர்ம வினைகளையும் போக்கி விடும் உக்கிரமாக சரண கோஷம் எழுப்பும் போது காட்டில் உள்ள விலங்குகள் பயந்து ஓடும்.

காட்டுப்பாதையில் சரண கோஷம் நமக்கு ஒரு பாதுகாப்பு.

படி ஏற... படி ஏற... வாழ்வு உயருதய்யா!

அய்யப்ப பக்தர்கள் மாலைக்கு மதிப்பளித்து ஒரு மண்டல காலம் விரத முறைகளை நெறியாகவும், முறையாகவும் கடைபிடித்து "தான்" என்னும் அகங்காரத்தை விட்டொழித்து இறைவனிடம் முழுநம்பிக்கை வைத்து, முழு சரணாகதி அடைந்து ஒரு முகமாக வழிபட்டால் இறைவனின் அருள் காடாட்சம் குறைவில்லாமல் கிடைக்கும்.

படிகள் எற ஏற அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்து கொண்டே இருப்பார்கள் என்பது பலரும் அனுபவித்த உண்மை.

Similar News