ஆன்மிக களஞ்சியம்

தீவினை மறைந்து நல்வினை உருவாக இந்த சரபரை வணங்குங்கள்!

Published On 2024-08-12 11:11 GMT   |   Update On 2024-08-12 11:11 GMT
  • கங்கைகொண்ட சோழபுரம், தாராபுரம், காரைக்குடி சிவன் கோவில்களில் ஸ்ரீ சரபேஸ்வரருக்குத் தனி சந்நிதிகள் உள்ளன.
  • உக்கிரம் தீர்ந்த சாந்த சொரூபியான நரசிம்மத்தை அன்புடன் வாரி அனைத்துக் கொள்ளும்படியான அபூர்வ தரிசனம்.

ஸ்ரீ சரபேஸ்வரர் உருவம் ஆலயத்தின் தூணில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல் பங்குனித் திருவிழாவில் சோமாஸ்கந்தமூர்த்திக்கு ஒரு வாகனமாயும் அமைக்கப் பட்டுள்ளன.

திருமயிலை தெற்கு மாட வீதியில் இருக்கும் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் ஆலயத்திலும் ஸ்ரீ சரபேஸ்வரர் வழிபாடு சிறப்பாக நடந்து கொண்டு வருகிறது.

பல பக்தகோடிகளின் வேண்டுகோளை ஸ்ரீ சரபேஸ்வரர் பூர்த்தி செய்கிறார்.

கங்கைகொண்ட சோழபுரம், தாராபுரம், காரைக்குடி சிவன் கோவில்களில் ஸ்ரீ சரபேஸ்வரருக்குத் தனி சந்நிதிகள் உள்ளன.

இவையன்றி சென்னையை அடுத்துள்ள திரிசூலம், திரிசூலநாதர் ஆலயம், திருவண்ணாமலை அண்ணாமலையார், சிதம்பரம் நடராஜர் கோவில் இங்கெல்லாம் சரபேஸ்வரர் மண்டபத்தூணில் சிற்பமாகக் காணப்படுகின்றார்.

சென்னையில் உள்ள கோயம்பேடு குசலபுரீஸ்வரர் என்ற குறுங்காலீஸ்வரர் கோவில் மண்டபத் தூணில் காணப்படும் சரபேஸ்வரரின் வடிவம் மிக அற்புதமானது.

உக்கிரம் தீர்ந்த சாந்த சொரூபியான நரசிம்மத்தை அன்புடன் வாரி அனைத்துக் கொள்ளும்படியான அபூர்வ தரிசனம்.

திருவாரூர் கோவிலின் மேலைக் கோபுரம், வைத்தீஸ்வரன் கோவில் கிழக்குக் கோபுரம், மதுரை மீனாட்சி ஆலய தெற்குக்கோபுரம், சிதம்பரம் நடராஜர் ஆலயக் கோபுரம் இங்கெல்லாம் சரபேஸ்வரர் சுதை வடிவங்களில் காணப்படுகின்றார்.

இத்தகைய ஆலயங்களில் காணப்படும் சரப மூர்த்தியை வழிபட்டால் தீவினை மறைந்து நன்மைகள் பல உண்டாகும் என்று கூறப்படு கிறது.

Tags:    

Similar News