ஆன்மிக களஞ்சியம்

திருமலையில் எழுப்பப்பட்ட ராமானுஜர் கோவில்

Published On 2024-09-02 11:12 GMT   |   Update On 2024-09-02 11:12 GMT
  • அவர் சென்ற இடங்களிலெல்லாம் தமது கொள்கைகளைப்பரப்பினார், பல்வேறு கொள்கையினருடன் வாதாடி வெற்றி பெற்றார்.
  • ஸ்ரீ வைணக்கோட்பாடுகள் மேன் மேலும் புதிய இடங்களுக்கு உயிரூட்டம் அளித்தன.

காஷ்மீரத்திற்கும் விஜயம் செய்தார். பின்னர் ஹரித்துவாரம் வழியாக, பத்ரி நாராயணனைச் சேவிப்பதற்கென பத்ரிகாசிரமத்தை யாத்திரை கோஷ்டி அடைந்தது.

பிறகு, குருச்சேத்திரம், பிருந்தாவனம் , வடமதுரை, காசி, பிரயாகை முதலிய இடங்களுக்கும் விஜயம் செய்தார்.

பின்பு, கயா, அயோத்தி மூலம் வங்க நாட்டிற்குச் சென்று, திரும்பும் வழியில் பூரி ஜகன்னாதம் வந்தார்.

திருவனந்தபுரத்தில் நடந்தது போன்றே ஜகன்னாதத்திலும் ராமானுஜருடைய சீர்திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

பின்னர் இவர் விஜயம் செய்த ஸ்ரீ கூர்மம் என்ற தலத்தில் இவருடைய சீர் திருத்தங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அதன் பின், ராமானுஜர் வாரங்கல், ஸ்ரீகாகுளம் முதலான இடங்களுக்கு விஜயம் செய்துவிட்டு, அகோபிலம் வழியாகத் திருப்பதி வந்தார்.

இது இராமானுஜருக்கு இரண்டாவது திருப்பதி விஜயம்.

இவ்வாறு மிக நீண்ட தீர்த்த யாத்திரையை ராமானுஜர் மேற்கொண்டார்.

அவர் சென்ற இடங்களிலெல்லாம் தமது கொள்கைகளைப்பரப்பினார், பல்வேறு கொள்கையினருடன் வாதாடி வெற்றி பெற்றார்.

ஸ்ரீ வைணக்கோட்பாடுகள் மேன் மேலும் புதிய இடங்களுக்கு உயிரூட்டம் அளித்தன.

இணையற்ற இத்தகு கைங்கரியம்செய்து, ஸ்ரீ வைணவக்கோட்பாடுகளுக்கு ஒப்பிலா புகழும் பெருமையும் சேர்ந்தமைக்காக, திருமலையில் ராமானுஜருக்குக்கோவில் அமைக்கப்பட்டது.

நம்மாழ்வார் உட்பட வேறு எந்த ஆழ்வாருக்குமோ, நாதமுனி உள்பட வேறு எந்த வைணவ ஆசாரியருக்குமோ, திருமலையில் கோவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News